Kogilavani / 2016 ஜூன் 03 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்
நோட்டன், லொனாக் மீனாட்சித் தோட்டத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அத்தோட்ட நிர்வாகத்துக்கெதிராக இன்று(3) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்டவளை கம்பனியின் கீழ் இயங்கும் வட்டவளை லொனாக் மீனாட்சி தோட்டத்தில், தொழிலாளர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் பெயர் குறிப்பில் (அன்றாடம் வேலை செய்ததை உறுதிப்படுத்துவதற்காக வழங்கப்படும் பெயர் அட்டை) வட்டவளை கம்பனி என்ற பெயர் நீக்கப்பட்டு, அத்தோட்டத்தில் தற்காலிகமாக இயங்கிவரும் பண்ணையின் பெயர் குறிபிடப்பட்டுள்ளது. இதனால், வட்டவளை கம்பனியின் கீழ் இயங்கும் இந்த தோட்டத்தை கம்பனி நீக்கிவிட்டதாக கருதி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேற்படித் தோட்டத்துக்கு வருகைத் தந்த தோட்ட நிர்வாகம், பொலிஸார் மற்றும் குறித்த பண்ணையின் உயரதிகாரிகள், தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கான காரணத்தை கேட்டறிந்து விளக்கமளித்தனர். பெயர் அட்டையில் தவறுதலாக பண்ணையின் பெயர் குறிபிப்பிடப்பட்டுள்ளதாகவும் இதனை சரிசெய்து புதிய பெயர் அட்டைகளை தொழிலாளர்களுக்கு வழங்குவதாகவும் தோட்ட நிர்வாகத்தின் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .