2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

மீன்பிடி உபகரணங்களும் குப்பைத் தொட்டிகளும் வழங்கி வைப்பு

Kogilavani   / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

நன்நீர் மீன்பிடித்துறையை ஊக்குவிக்கும் வகையிலும் சூழல் சுத்தத்தைப் பாதுகாக்கும்  வகையிலும் மீன்பிடி உபகரணங்களும் குப்பைத் தொட்டிகளும் மத்திய மாகாண விவசாய அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன், புதன்கிழமை (28) வழங்கி வைத்தார்.

மத்திய மாகாண நன்நீர் மீன்பிடி விவசாய மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ரூபாய் 12 இலட்சம் நிதியொதுக்கீட்டில் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களைச் சேர்ந்த 60 பயனாளிகளுக்கு குப்பைத்தொட்டிகளும் 17 பயனாளிகளுக்கு மீன்பிடி உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகள் மாகாணசபை உறுப்பினர் சிவஞானம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .