2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மானியத்துக்காக சத்தியாக்கிரகம்

Kogilavani   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-காஞ்சன குமார ஆரியதாச

உரமானியத்தைப் பெற்றுத்தருமாறு கோரியும் நெல்லுக்கான உத்தரவாத விலையை அறிவிக்குமாறு கோரியும் தம்புள்ளையில் அகில இலங்கை விவசாய சம்மேளனம் மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரக போராட்டம் நேற்று(9) ஆறாவது நாளாகவும் தொடர்ந்தது.  

இதுதொடர்பில் விவசாய அமைச்சர் வசந்த அலுவிவகாரவிடம் கேட்டபோது,

'இவ்விடயம்; தொடர்பில், விவசாயிகளுடன் கலந்துரையாடினேன். ஒரு ஹெக்டேயர் நிலப்பரப்புக்கு 25,000 ரூபாய் உரமானியம் வழங்குமாறு கோரினர். எனினும், இரண்டு ஏக்கர் நிலப்பரப்புக்கு 25,000 ரூபாய் உரமானியம் பெற்றுத்தருவதாக நான் கூறினேன். இதனையடுத்தே அவர்கள், சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .