2025 ஜூலை 05, சனிக்கிழமை

மாபெரும் மலர்க் கண்காட்சி

Sudharshini   / 2015 நவம்பர் 04 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு மாபெரும் மலர்க் கண்காட்சியொன்றை வடமாகாண சுற்றாடல் அமைச்சி ஏற்பாடு செய்துள்ளது.

வடமாகாண தாவர உற்பத்தியாளர்கள் சங்கம் பங்கேற்கும் இம்மலர்க் கண்காட்சி நல்லூர் சங்கிலியன் பூங்காவில் (கிட்டு பூங்கா) வியாழக்கிழமை (05) பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகி எதிர்வரும் புதன்கிழமை (11) வரை நடைபெறவுள்ளது.

இதனை வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா திறந்து வைக்க உள்ளார்;. வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள் தாவர உற்பத்தியாளர்கள் பங்கேற்கும்  இக்கண்காட்சியில், நல்லின பழ மரக்கன்றுகள், நிழல் மரக்கன்றுகள், வெட்டு மரக்கன்றுகள், அலங்காரத் தாவரங்கள் என்பன காட்சிப்படுத்தப்படுவதோடு விற்பனையும் செய்யப்படவுள்ளன.

தினமும் காலை 9 மணியில் இருந்து மாலை 7 மணிவரை நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியைப் பார்வையிட வரும் மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .