Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
J.A. George / 2024 ஏப்ரல் 25 , பி.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக மக்கள் முன்னணியின் பேராளர் மாநாடும் 35வது ஆண்டுவிழாவும் எதிர்வரும் 28ம் திகதி ஹட்டன் Dkw கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இதன்போது 400 தோட்டத்தலைவர்கள் கௌரவிக்கப்படுவார்கள் என, மலையக தொழிலாளர் முன்னணியின் பதில் பொதுச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், “மலையக மக்கள் முன்னணி 35 வருடமாக மலையக மக்களுக்கான ஒரு சக்தி மிக்க ஒரு குரலாக ஒலித்து வருகின்றது. 35 வருடங்களாக மலையக மக்களின் மகிழ்ச்சி, துன்பம் என அனைத்திலும் தோளோடு தோள் கொடுத்து வருகின்றது.
மலையகத்தின் மாபெரும் சக்தியாக மலையக மக்கள் முன்னணி உருவாகுவதற்கு ஏணிப்படிகளாக காணப்பட்ட தொழிற்சங்க தலைவர்கள் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். எனவேதான், மாநாட்டில் அவர்களை பொன்னாடை அணிவித்து சான்றிதழ் வழங்கி கௌரவிக்கின்றோம். அதேபோல தோட்ட தொழிற்சங்க தலைவர்களின் புகைப்படங்கள் அடங்கிய சிறப்பு மலர் வெளியிடப்படவுள்ளது.
அதுமட்டுமல்லது நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை ஆகிய 5 மாவட்டங்களில் இயங்கும் மலையக மக்கள் முன்னணியின் 30 காரியாலய உத்தியோகத்தர்களையும் கௌரவிக்க உள்ளோம்.
தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடிகள், தோட்ட கம்பனிகளின் கெடுபிடிகள் என அனைத்து பிரச்சனைகளிலும் மக்களின் பக்கம் நின்று அவ்விடயத்தை மேலிடத்துக்கு கொண்டு சென்று அப்பிரச்சனைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைளில் காரியாலய உத்தியோகத்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், நாட்டின் நான்காவது தூணாக காணப்படும் ஊடக துறை சார்ந்தவர்களுக்கும் மிகப்பெரிய கௌரவம் அளிக்கப்படுவதோடு மலையக மக்கள் முன்னணி எனும் மிகப்பெரிய சாம்ராஜ்யம் உருவாகுவதற்கு அடித்தளமிட்டு அதை ஸ்தாபித்த மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர் சந்திரசேகரனுக்கு தபால் தலை வெளியிடப்படவுள்ளது.
எனவே, மலையக மக்கள் முன்னணியின் பேராளர் மாநாடும் 35வது ஆண்டு விழாவும் மலையக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதிக்கக்கூடிய வரலாற்று மாநாடாக அமையும்” என மலையக மக்கள் முன்னணியின் பதில் பொதுச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
-நீலமேகம் பிரசாந்த்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
28 minute ago
54 minute ago
2 hours ago