2026 ஜனவரி 21, புதன்கிழமை

‘ம.ம.முன்னணியின் கதவுகள் திறந்தே இருக்கும்‘

Ilango Bharathy   / 2021 ஜூலை 12 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

‘மக்களின் தொழிற்சங்கப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, மலையக மக்கள் முன்னணியின்
கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்.யாரும் வரலாம் கட்சி பேதமின்றி பிரச்சனைகளை தீர்த்து
வைக்க மலையக மக்கள் முன்னணியும்,மலையக தொழிலாளர் முன்னணியும்  தயாராக இருப்பதாக‘ பொதுச்செயலாளர் க .சுப்ரமணியம் குறிப்பிட்டார்.

இதுவரை மலையக மக்களின் 3,188 தொழிற்சங்க பிரச்சினைகள் மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்கமான  மலையக  தொழிலாளர் முன்னணி ஊடாக தீர்த்து வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், மலையகத்தில் காணப்படும்  28 காரியாலயங்களும் 106 தொழிற்சங்க உத்தியோகத்தர்களும் மக்களின் நலனுக்காக சேவை செய்து வருகின்றனர்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.ராதாகிருஸ்ணனின் சிறப்பான தலைமைத்துவத்தின் ஊடாக, எவ்வித உத்தியோகத்தர்களும் பணிநீக்கமின்றி செவ்வனே சேவை செய்து மக்களின் தொழிற்சங்க பிரச்சனைகளை தீர்ப்பதில் மும்முரமாக உத்தியோகத்தர்களும் கட்சியும் செயற்படுவதாகக் குறிப்பிட்டார்.

மேலும் மக்களின் பிரச்சனைகளை கேட்டறிய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதோடு, இதன் மூலம் மக்களின் பிரச்சனைகளை தேடியறிவது மட்டுமல்லாமல் தேடிவரும் பிரச்சனைகளை
உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படுகின்றது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X