Sudharshini / 2015 ஒக்டோபர் 08 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நான்கு வயதேயான தனது மகனை, காட்டில் தனியாக விட்டுவிட்டு, தப்பிச் செல்ல முயன்ற தந்தையை எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வலப்பனை நீதவான் நீதிமன்ற நீதவான் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, சிறுவனை கண்டியிலுள்ள சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்குமாறு பொலிஸாரை நீதவான் பணித்துள்ளார்.
ஹங்குரங்கெத்த, ரிகில்லகஸ்கட கடுகஸ்ஹின்ன பிரதேசத்தில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தான் எதிர்வரும் ஜனவரி மாதம் மற்றுமொரு திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் இதற்கு மகன் தடையாக உள்ளதால் மகனை காட்டில் விடுவதற்கு தீர்மானித்தாகவும் அவரது தந்தை வாக்குமூலமளித்துள்ளார்.
மகன் பிறந்த நான்கு மாதங்களிலேயே அவரது தாய், பணிப்பெண்ணாக வெளிநாட்டுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026