2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மக்களின் நலன் கருதி தீர்மானங்களை எடுப்போம்: உதயகுமார்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 14 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களின் நலன் கருதியே தொழிலாளர் தேசிய சங்கம் அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுக்கும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்தார்.

ஹட்டனில் இடம் பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் விசேட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் உதயகுமார் மேலும் பேசுகையில் கூறியதாவது,

தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்க வைக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் எப்போதும் மக்கள் நலன் கருதியே அரசியல் தீர்மானங்களை எடுக்க கூடியவர். அதற்கேற்பவே எமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வங்கிரோதத்து நிலைமை காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்து உள்ளோம்.
எமது நாடு இறக்குமதியில் தங்கி உள்ள ஒரு நாடாகும்.
எமது நாட்டின் ரூபாவின் பெறுமதி குறைந்து பணவீக்க நிலைமை அதிகரித்துள்ளது.

இதனால் நாளுக்கு நாள் எமது நாடு பொருளாதார ரீதியாக பல்வேறு சவால்களை எதிர் நோக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த நாட்டில் சர்வ கட்சி அரசாங்கம் ஒன்று ஏற்படுமானால் மக்களின் நலன் கருதி வெளியிலிருந்து நாம் ஆதரவு கொடுப்போம். அமைச்சுப் பொறுப்புகளை ஏற்க மாட்டோம் என்கிறார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X