Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 01 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கான சேவையைத் தொடர்ந்து செய்துவரும். இதற்கு அமைச்சு பதவி தான் வேண்டும் என்பது இல்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
கொட்டகலையில் இன்று (01), இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மே மாதம் முதலாம் திகதி, உலகளாவிய ரீதியில் தொழிலாளர் தினமான மேதினத்தை கொண்டாடுகின்றார்கள். அதேபோன்று இ.தொ.காவும் கொட்டகலையில் மேதினத்தை விமர்சையாக கொண்டாடியது. இலங்கையில் வெசாக் பண்டிகை காரணமாக எதிர்வரும் 7ஆம் திகதி, மேதின விழாவை அனுஷ்டிக்குமாறு அரசாங்கம் கேட்டிருந்தது.
“பௌத்த மதத்தின் இந்த பண்டிகை நிகழ்வுக்கு மரியாதை கொடுத்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், எதிர்வரும் 7ஆம் திகதி மேதின நிகழ்வை பேரணியுடனும், பொது கூட்டத்துடனும் நுவரெலியாவில் நடத்தவுள்ளது.
“மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்களுக்கு சேவை செய்ய அமைச்சு பதவி தான் வேண்டும் என்பதை எதிர்பார்த்து இதுவரையும் மக்களுக்கு சேவை செய்யவில்லை. மக்களோடு மக்களாக இணைந்து அவர்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்து வருவது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தான். நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் இதற்கு ஒரு சான்றாக அமைந்திருந்தது எனவும் தெரிவித்தார்.
22 minute ago
31 minute ago
43 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
31 minute ago
43 minute ago
52 minute ago