Janu / 2024 மார்ச் 14 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
"மக்கள் தற்போது தெளிவோடு இருக்கின்றார்கள் இனியும் அவர்களை ஏமாற்ற முடியாது. மக்களின் ஏகோபித்த வாக்குகளை சஜித் பிரேமதாஸவிற்கே வழங்குவார்கள் " என ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
" கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியை விரும்பி மக்கள் ஆட்சிக்கு அமர்த்தினர் ஆனால் அவரின் தன்னிட்சியான ஆட்சியாலும் நாட்டை பாதாளத்தில் தள்ளியதாலும் மக்களே துரத்தியடித்தனர். அது போலதான் இந்த அரசாங்கமும் நாட்டை கட்டியெழுப்புவோம் என கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் மக்களை மீண்டும் மீண்டும் பாதாளகுழிக்கே தள்ளுகின்றனர்.குறிப்பாக மலையக மக்களின் இயல்பான வாழ்க்கை மாறியுள்ளது.பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளனர்.
எனவே மக்கள் தேர்தலை எதிர்நோக்கி காத்துருக்கின்றனர்.அதில் மக்களின் ஆதரவு ஐக்கிய மக்கள் சக்திக்கே காணப்படும் அதில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவின் கை பலமாகும் நாடு சுபீட்சநிலைக்கு செல்லும் மக்கள் எதிர்பார்த்த ஆட்சி கிடைக்கும்.இனியும் அரசாங்கத்தில் இருப்பவர்களோ அல்லது மக்களின் வாக்குகளை சூரையாட நினைப்பவர்களோ மக்களின் முன் சென்றாலும் மக்கள் வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்திக்கே கிடைக்கும் " என தெரிவித்துள்ளார் .
நீலமேகம் பிரசாந்த்

26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026