Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 25 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றுக்குள்ளாகி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில், திவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், நேற்று (24) உயிரிழந்த முன்னாள்
அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு மலையகத் தலைவர்கள் தமது இரங்கல்களை
தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, ஐக்கிய தேசிய கட்சியின் நீன்ட நாள் உறுப்பினரும், முன்னாள் நிதி அமைச்சருமான மங்கள சமரவீரவின் இழப்பு அதிர்ச்சியை தந்துள்ளதுடன், அவரது இழப்பு பேரிழப்பு என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளர்.
இலங்கை அரசியல் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத ஒரு அரசியல்வாதியாக
திகழ்ந்தவர் முன்னாள் அமைச்சர் அமரர் மங்கள சமரவீர. அவருடைய மறைவு என்றுமே
ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பாகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்
தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நிதி அமைச்சரும் கடந்தகால அரசாங்கங்களில் பல்வேறு முக்கிய பதவிகளையும்
வகித்திருந்த சிரேஷ்ட அரசியல்வாதி மங்கள சமரவீரவின் திடீர் மறைவானது, ஆழ்ந்த
துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும்
பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில்
தொண்டமான் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை அரசாங்கத்தில் பல முக்கிய பதவிகளை வகித்த
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களின் திடீர் மறைவானது ஆழ்ந்த துயரத்தை
ஏற்படுத்தி உள்ளதென தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
31 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
4 hours ago