Gavitha / 2021 ஜனவரி 05 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவி
கம்பளையில், முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவரிடம் இருந்து 3 இலட்சத்து 18 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட மூவரை, கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கம்பளை நகருக்கு கடந்த 28 ஆம் திகதி வருகைதந்துள்ள முன்னாள் கடற்படை அதிகாரி, வீடு நிர்மாணப் பணிகளுக்காக வங்கியிலிருந்து 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு வந்துள்ளார். அத்துடன், அவரிடம் ஏற்கெனவே 10 ரூபாயும் இருந்துள்ளது.
வங்கியில் இருந்து பணத்தை எடுத்த அவர், மதுபானம் அருந்திவிட்டு, தள்ளாடி நடந்து சென்று, அங்குள்ள சிகையலங்கார நிலையத்தில், தலைக்கு 'மசாஜ்' போட்டுள்ளார்.
இந்நிலையில் அதிக மதுபோதையில் வீதியில் நடந்து சென்ற போது, அவரை ஆட்டோவில் ஏறும்படி கூறிய நபர்கள், அவரிடம் இருந்து பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, சிசிரீவியின் உதவியுடன் சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.
8 hours ago
8 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
17 Dec 2025