மொஹொமட் ஆஸிக் / 2020 மே 07 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நிலவும் மஞ்சளுக்கான தட்டுப்பாட்டை இல்லாமல் செய்வதற்காக, பல திட்டங்களை அமல்படுத்தவுள்ளதாக, ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஏ.பீ.ஹீன்கெத்த தெரிவித்தார்.
தற்போது மஞ்சள்தூளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், இது தொடர்பாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஏ.பீ. ஹீன்கெத்தவிடம் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டின் தேவைக்காக, வருடத்துக்க 7,900 மெட்ரிக் தொன் மஞ்சள் தேவைப்படுவதாகவும் அனால், கடந்த வருடம் வரை இதில் 1,500 மெட்ரிக் தொன் மாத்திரமே இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் மிகுதி 5,400 மெட்ரிக் தொன் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார்.
எனினும், கடந்த வருட இறுதியில், மஞ்சள் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டதையடுத்தே மஞ்சள் தூளுக்கு சந்தையில் தட்டுப்பாடு நிலவ ஆரம்பித்தது என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், இந்தத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக, பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அதன் முதற்கட்டமாக, சுங்கப்பிரிவால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 600 மெட்ரிக் தொன் மஞ்சளை, சந்தைக்கு அனுப்பவுள்ளதாகவும் இவ்வருடம் சுமார். 2,200 ஹெக்டெயாரில் புதிதாக மஞ்சள் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்மூலம் மாத்திரமே, மஞசள்தூளுக்கான மொத்தத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026