Editorial / 2024 மே 08 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

அதிவேகமாக வந்த முச்சக்கர வண்டியொன்று (ஓட்டோ), பாதசாரி கடவையில் (மஞ்சள் கோட்டில்) வீதியை கடந்துச் சென்றுக்கொண்டிருந்த மாணவனை பந்தாடிய காட்சிகள் சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
வெலிமடையில் இருந்து ஹட்டன் நோக்கி முச்சக்கர வண்டியுடன் மோதியதில் பலத்த காயங்களுக்குள்ளான மாணவன் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள பாதசாரி கடவையில் செவ்வாய்க்கிழமை (07) நண்பகல் 12 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தனியார் வகுப்பில் பங்கேற்க வந்த பாடசாலை மாணவன், வீதியை கடக்க முற்பட்ட போது அதிவேகமாக வந்த முச்சக்கரவண்டி பாடசாலை மாணவன் மோதியதில் மாணவன் சில அடிகள் தூரம் தரையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதில் அந்த மாணவன் படு காயமடைந்துள்ளார் என திம்புள்ள- பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியின் சாரதியை சந்தேகத்தின் பேரில் கைது செய்த திம்புள்ள-பத்தனை பொலிஸார் சந்தேக நபரை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.
15 minute ago
30 minute ago
31 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
30 minute ago
31 minute ago
32 minute ago