2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

மடுல்சீமைக்கு வருபவர்களுக்கு எச்சரிக்கை

Kogilavani   / 2021 பெப்ரவரி 10 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சு.சுரேந்திரன்   

மடுல்சீமை பிரதேசத்தில் காணப்படும் சிறய உலக முடிவை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள், மிகுந்த அவதானத்துடன் அப்பகுதிக்கான பயணங்களை மேற்கொள்ளுமாறு மடுல்சீமை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மடுல்சீமை பகுதியில் தற்போதைய காலங்களில் மிகவும் மழையுடன் கூடிய பனிமூட்டமான காலநிலை நிலவுகின்றது என்றும் இதன் காரணமாக சிறிய உலக முடிவுப்பகுதியின் பாதைகளில் பயணிக்கும் போதுமிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அவர் மேலும் தெரிவித்தார். 

நான்கு நாட்களுக்கு முன்பாக இப்பகுதியில் சுற்றுலா மேற்கொண்ட தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றும் ஊடகவியலாளர் ஒருவர், காலிடறி விழுந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X