2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மண்சரிவால் மக்கள் பாதிப்பு

Kogilavani   / 2015 நவம்பர் 06 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சுஜிதா

மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலைக் காரணமாக மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

லிந்துலை, லிப்பக்கலை தோட்டத்தில் நேற்று(5) இரவு, மண்மேடு சரிந்து விழுந்ததில் வீடொன்று சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இப்பகுதியிலுள்ள ஆறு பெருக்கெடுத்தமையால் வீடுகளினுள் ஆற்றுநீர் உட்புகுந்ததால் தோட்ட மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். மேலும் லிந்துலை, எல்ஜின் பிரதான வீதியில் பிரிதொரு மண்சரிவால் போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது.

இதேவேளை,  லிந்துலை வளஹா  தோட்டத்திலுள்ள கடையொன்று இடிந்து குடியிருப்பின் மீது விழுந்ததால் அக்குடியிருப்பிலுள்ள 4 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .