2026 மே 09, சனிக்கிழமை

dd

மணலுக்கு அடியில் பலகை கடத்தியவர்கள் கைது

ஆ.ரமேஸ்   / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீர்த்தி பண்டாரபுர பொலிஸ் சோதனை சாவடி ஊடாக, மையங்கனை பகுதியிலிருந்து நுவரெலியாவுக்கு மணல் ஏற்றி வந்த டிப்பர் லொரி ஒன்றில், விலை உயர்ந்த மரப்பலகைகள் கடத்தப்பட்டுள்ளதாக, வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.

​கடந்த சனிக்கிழமை (01) இரவு நடைபெற்ற திடீர் சோதனையின் போது, இது தொடர்பாக கண்டறியப்பட்டதாகவும் இதன்போது, 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான மரப்பலகைகள் கைப்பற்றப்பட்டன என்றும் லொறியின் சாரதியும் நடத்துநரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கடத்தல் சம்பவம், மிக நீண்ட காலமாக இடம்பெற்று வந்துள்ளமை, முதற்கட்டவிசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என்றும் அனுமதிப்பத்திரத்துடன் மணல் ஏற்றி வரும் லொறியில், மணலுக்கு அடியில், இந்த மரப்பலகைகள் கடத்தப்பட்டு வந்துள்ளன என்றும் இவை, நுவரெலியாவில் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளன என்றும் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .