Freelancer / 2023 மார்ச் 09 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டன் மின்சார நுகர்வோர் சேவை மத்திய நிலையத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் ஹட்டன்-டிக்கோயா வனராஜா தோட்டத்தில் மணிக்கவத்த பிரிவு உள்ளிட்ட பல தோட்டங்களின் மின்பாவனையாளர்களுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக மாதாந்த மின்கட்டண பட்டியல் விநியோகிக்கப்படவில்லை என நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மணிக்கவத்தை தோட்டம் உள்ளிட்ட ஏனைய தோட்டங்களின் மின்பாவனையாளர்களுக்கு இறுதியாக, கினிகத்ஹேன பிரதேச மின்பொறியியலாளர் காரியாலயத்தின் ஊடாக மின்கட்டண பட்டியல் 2022 ஆம் ஆண்டு 10ஆம் மாதமே விநியோகிக்கப்பட்டுள்ளது.
அன்றில் இருந்து இன்று வரையிலும் எந்தவிதமான மின்சாரக் கட்டண பட்டியலும் விநியோகிக்கப்படவில்லை என்று அப்பிரதேசங்களைச் சேர்ந்த நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.

இறுதியாக விநியோகிக்கப்பட்ட மின்சாரப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் கட்டணத்தை தங்களால் தாங்கிக்கொள் முடியவில்லை என்றும் நான்கு மாதங்களுக்கான கட்டணம் ஒரே தடவையில் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் வருமான வழிகள் இன்மையால் கடும் சிரமங்களுக்கு உள்ளாகுவதாக மின்சார நுகர்வோர் தெரிவித்தனர்.
நான்கு மாதங்களுக்கான மின்கட்டண பட்டியல் ஒரே தடவையில் வழங்கினால், பயன்படுத்திய மின்கட்டண அலகுகள் அதிகரித்து, மின் கட்டண பட்டியலிலும் தொகை அதிகரிக்கும். அவ்வாறே பாவிக்கப்பட்ட மின் அலகுகளுக்கான கட்டணங்களும் அதிகரித்துள்ளன என மணிக்கவத்தை மின் நுகர்வோர் தெரிவித்தனர்.
மின்சார சபையினால் வழங்கப்படும் மின் கட்டணத்தை செலுத்த முடியாத பட்சத்தில் வீடுகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பையும் மின்சார சபையினால் துண்டிக்க நேரிடும் என நுகர்வோர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
அந்த தோட்டத்திலுள்ள தோட்டத் தொழிலாளர்கள் எழுப்பும் குற்றச்சாட்டு தொடர்பில், கினிகத்தேன மாவட்ட மின் பொறியியல் அலுவலகத்தின் வர்த்தக மின் பொறியியலாளர் அமல் சேனாரத்னவிடம் கேட்டபோது, தனது மின் பொறியியல் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் 28 மீட்டர் வாசகர்கள் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் மீட்டர் வாசிப்பாளர்கள் போதிய அளவு இல்லாததால்,அப்பகுதியை சேர்ந்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மாதாந்திர மின்கட்டணம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றார்.
ஹட்டன்- டிக்கோயா பிரதேசத்தின் மின் பாவனையாளர்களுக்கு பல மாதங்களாக மின் கட்டண பட்டியலை வழங்க முடியவில்லை என்பதை ஒப்புக் கொள்வதாகவும், அந்த மாதங்களுக்கான மின் கட்டணத்தை தனியாக வழங்கி அந்த நுகர்வோருக்கு கால அவகாசம் வழங்குவதாகவும் அமல் சேனாரத்ன தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago