Editorial / 2024 செப்டெம்பர் 15 , பி.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மண் வர்த்தகர்த்தில் ஈடுபடும் வியாபாரி ஒருவர் மண்ணுக்குள் புதையுண்டு உயிரிழந்துள்ள சம்பவம் மாவத்தகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெவுட ஹரன்கஹகொட பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதான ரணசிங்க சானக எரோஷன் என்ற வர்த்தகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கொட்டிகாபொல பிரதேசத்தில் நீண்ட காலமாக மண் வெட்டி விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வருபவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர் தனது பெக்ஹோ இயந்திரத்துடன் பணிபுரிந்து கொண்டிருந்த போது ஆழமான குழியில் தவறி விழுந்ததாகவும், அவருக்கு மேல் மண் சரிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் நாற்பது நிமிடம் சிரமப்பட்டு மண்ணை அகற்றியதில் அவரது உடலை கண்டுபிடித்ததாகவும், அதற்குள் அவர் இறந்துவிட்டதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025