Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்தும் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின், அயகம், பலாங்கொடை, இம்புல்பே, கலவான, எலபாத்த, இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கே, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயம் குறித்து முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு, அனர்த்த முகாமைத்துவத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதேவேளை, மலையகத்தில் நீடித்துவரும் மழையுடனான வானிலை காரணமாக, பிரதான வீதிகள் வழுக்கல் தன்மையுடன் காணப்படுவதுடன், பனிமூட்டமும் அதிகரித்துள்ளது.
ஹட்டன் - நுவரெலியா வீதியில் அதிக பனிமூட்டம் நிலவுவதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்காரணமாக, போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதெனவும், பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால், போக்குவரத்தில் ஈடுபடும் வாகன சாரதிகளை, அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .