Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2024 ஏப்ரல் 24 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்ல கரடகொல்ல மலித்தகொல்ல பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் வாழ்ந்த 10 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு புதன்கிழமை (24) மீண்டும் இடம்பெயர்ந்ததாக எல்ல பிரதேச செயலாளர் இந்திக்க கயான் பத்திரன தெரிவித்துள்ளார்.
இந்த இடத்தில் முன்பு பெரிய அளவில் கச்சா நீர் ஓடிக் கொண்டிருந்ததாகவும், அந்த இடத்தில் நிலமும் விரிசல் ஏற்பட்டு வெடித்துச் சிதறியதாகவும் அவர் கூறினார்.
இந்நாட்களில் மழை பெய்யாவிட்டாலும், வறண்ட காலநிலை நிலவி வருவதால், மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. அசுத்தமான நீர், ஓடையாக அந்த இடத்தில் ஓடுகிறது என்றார்.
அக்குடும்பங்கள் தற்போது உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக எல்ல பிரதேச செயலாளர் இந்திக்க கயான் பத்திரன மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
33 minute ago
59 minute ago
2 hours ago