Editorial / 2025 டிசெம்பர் 14 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.அமீனுல்லா
அனர்த்தத்தால் மூடப்பட்டிருந்த கட்டுகஸ்தோட்டை – ஹல்ஒலுவ வீதியின் வராதென்ன பகுதியில் மீண்டும் போக்குவரத்திற்காக திறப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட மண் அகற்றும் பணிகளின்போது, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் 28 வயது நபர் ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (14) அன்று கைது செய்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளானவர் 58 வயதுடைய வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுத்திகரிப்பு பணிகள் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், சந்தேக நபர் ஓட்டிச் சென்ற லொறியை நீண்ட நேரம் நிறுத்தி வைத்ததாகக் கூறி கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் தாக்குதல் மேற்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸாரால் லொறி கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025