Kogilavani / 2017 ஜூலை 02 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி, நிவித்திகல பகுதியில், மாணிக்கக்கல் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்தோர் மீது மண்திட்டு சரிந்து விழுந்ததில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் வைத்தியசாலையின் அதிதீவிரப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவருவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் ஒருவரே, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இன்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில், மதார பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது நபரே, உயிரிழந்துள்ளார். இவரது சடலம், பிரேத பரிசோதனைக்காக, வதுப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், நிவித்திகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .