2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

மண்மேடு சரிந்து இருவர் பலி

Freelancer   / 2021 நவம்பர் 10 , பி.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இக்பால் அலி

தொடங்கஸ்லந்த கொரஸ்ஸ, உடவத்த பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில், அவ்வீட்டில் வசித்து வந்த வயோதிபர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் 76 வயதுடைய வெலிமுணி ஆராய்ச்சிலாகே சிறினேச என்பவரும் 65 வயதுடைய உக்வா தேவாலாகே குனவதி என்ற பெண்ணுமே உயிரிழந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று (09) 9.45 மணி அளவில் வீட்டின் மேல் மண்மேடு சரிந்து விழுந்ததால், வீடு முற்று முழுதாக மண்ணுக்குள் புதையுண்டதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

சேதமுற்ற வீட்டுக்கு கீழே இருந்த சிமெந்து கல் தொழிற்சாலையும் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், வீட்டின் ஒரு பகுதி மண் மற்று சேற்றினால் மூடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் மண்சரிவினால் மேலும் 03 வீடுகள் பாதிப்புக்குள்ளாகும் ஆபத்தான  நிலையில் இருப்பதாகவும் அவர்களை தற்காலிமான இடமொன்றுக்கு அகற்றியுள்ளதாகவும் குருநாகல் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் விராஜ் திசாநாயக தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X