2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

மண்வெட்டி கணையால் தாக்கப்பட்டு ஒருவர் பலி

Janu   / 2025 மே 11 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை கூம்வூட்  தோட்டத்தில் ஆண் ஒருவர் சடலமாக ஞாயிற்றுக்கிழமை (11) காலை மீட்கப்பட்டுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான 53 வயது மதிக்கத்தக்க  ஆண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.   

சடலத்தை கண்ட பிரதேச மக்கள்  வழங்கிய தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

சனிக்கிழமை (10) இரவு குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக குறித்த நபர் அவரது மைத்துனர் ஒருவரால் வீட்டில் இருந்த மண்வெட்டி கணையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். பின்னர் உறவினர்களால் சடலம் வேறொரு இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான  மேலதிக விசாரணைகளை லிந்துலை  பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X