Editorial / 2023 ஓகஸ்ட் 30 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான், எஸ்.கௌசல்யா, ரஞ்சித் ராஜபக்ஷ பி.கேதீஸ் எஸ். கணேசன்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளஹா தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை (29) இரவு ஏற்பட்ட கைகலப்பில் மண்வெட்டி தடியில் தாக்கப்பட்டதால் ஒருவர் மரணம்.
தாயுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அயல் வீட்டில் உள்ள ஒருவர் மண்வெட்டி தடியால் தாக்கியுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
புதன்கிழமை (30) அதிகாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். 3 பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய வீரசாமி பெஞ்சமின் என்பவரே மரணமடைந்தார்.
தாக்குதலை நடத்தினார் என்றக் குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டுவந்த நபர், தலைமறைவாகி இருந்த நிலையில் லிந்துலை- நாகசேனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago