2025 ஜூலை 16, புதன்கிழமை

மத்துரட்டயை எதிர்த்து தொழிலாளர்கள் பேரணி

Sudharshini   / 2015 டிசெம்பர் 14 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்துரட்ட பிளாண்டேசனுக்கு உட்பட்ட தோட்டங்களில்  தொழிலாளர்களுக்கு எதிராக முன்னெக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து,  சுமார் 1,000க்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் கந்தபொல, எல்மாவிலிருந்து புரூக்சைட் வரை இன்று (14) பேரணி நடத்தினர்.

இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மத்துரட்ட  பிளாண்டேஷனுக்கு உட்பட்ட 10 தோட்டங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

தேயிலைத் தோட்டங்களை காடாக்குதல், தொழிற்சாலைகள் மூடப்படுதல் மற்றும் உடைப்பு, ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பவற்றை பலவந்தமாக வழங்கல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் கடந்த சில வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவற்றை உடனடியாக நிறுத்தக் கோரியும் தோட்டங்களை சரியாக பராமறிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியே இந்த பேரணி நடத்தப்பட்டிருந்தது.

3-4 வருட காலப்பகுதிக்குள் 3 தொழிற்சாலைகள் உடைக்கப்பட்டுள்ளன. மேலும் 6 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மூடப்பட்டுள்ள தொழிற்சாலைளை திறக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X