2025 ஜூலை 05, சனிக்கிழமை

மதில் இடிந்து விழுந்ததில் வீட்டின் பகுதி சேதம்

Kogilavani   / 2015 நவம்பர் 06 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜ்

அக்கரப்பத்தனை, ஹோல்புறூக் பன்சல கொலனி பகுதியில் மதில் இடிந்து விழுந்ததில் அவ்வீட்டின் ஒரு பகுதி சேதமாகியுள்ளது.

புதன்கிழமை(4) இடம்பெற்ற இச்சம்பவத்தினால் வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் நீர்தாங்கி என்பன சேமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தில் இவ்வருடம் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவி ஒருவர் உள்ளதால் அவர் தன்னை பரீட்சைக்கு ஆயத்தப்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை இக்கொலனிக்கு செல்லும் பாதையிலும் வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன் மண்மேடு சரிந்து விழும் அபாயம் நிலவுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் 150 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .