Editorial / 2023 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பார்வீதியிலுள்ள மதகு ஒன்றின் கீழிருந்து அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் வியாழக்கிழமை (10) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
பார்வீதி உப்போடை சந்தியை அண்மித்த பகுதியிலுள்ள மதகின் கீழ் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நீதிமன்ற உத்தரவை பெறுவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துவருவதாக தெரிவித்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago