Ilango Bharathy / 2021 ஜூன் 22 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
இரவு 9 மணி வரை ஹட்டன் நகரிலுள்ள மதுபான நிலையங்கள் திறந்திருப்பதால்
அதிகளவானோர் கொள்வனவு செய்ய வருகைத் தருவதுடன், இவர்கள் மதுபோதையில் மதுபானநிலையங்களுக்கு அருகில் சுற்றித்திரிவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே மதுபான நிலையங்களை மாலை 6 மணியுடன் மூடுவதற்கு கலால் திணைக்கள
பணிப்பாளரும் சுகாதார சேவை பணிப்பாளரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஹட்டன்
பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும் இன்று (22) நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுபாடுகள்
தளர்த்தப்பட்டுள்ள நிலையில், சுகாதார சேவை பணிப்பாளரின் ஆலோசனைக்கமைய மதுபான நிலையங்களை இரவு 9மணிவரை திறந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளதென, ஹட்டன் கலால் அலுவலக பொறுப்பதிகாரி ஜானக பெரேரா தெரிவித்தார்.
இறுதியாக பயணக்கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்ட போது, மதுபான நிலையங்களைத்
திறப்பது குறித்து சுகாதார சேவை பணிப்பாளரால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தை இரத்துச்
செய்து, 21ஆம் திகதி புதிதாக வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்துக்கு அமைய, காலை 9
மணியிலிருந்து இரவு 9 மணிவரை மதுபான நிலையங்களை திறந்து வைக்க அனுமதி
வழங்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றாமல் இருக்கும் மதுபான விற்பனை
நிலையங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கபடும் என்றும் அவர் தெரிவித்தார்.
35 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
2 hours ago