Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Kogilavani / 2017 ஒக்டோபர் 10 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
தீபாவளிப் பண்டிகையன்று, பதுளை மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடிவிடுவதற்கு உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார், மதுவரி மற்றும் கலால் திணைக்கள பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்பியுள்ள அவசர தொலைநகலில் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தீபாவளிப் பண்டிகையானது, இந்துக்கள் சமய ரீதியில் கொண்டாடும் அதிமுக்கிய பண்டிகையாகும். வரலாற்று ரீதியிலும், இந்து சமய ரீதியிலும் இப்பண்டிகை முன்னிலைப்படுத்தப்படுகின்றது.
இந்நிலையில், மதுபான விற்பனை நிலையங்களை தீபாவளித் தினத்தன்று மூடிவிடுவதன் மூலம் அப்பண்டிகையை சிறப்புற கொண்டாடுவதற்கு வழியேற்படும்.
எனவே, தீபாவளித் தினத்தன்று மதுபான விற்பனை நிலையங்கள் அனைத்தையும் மூடிவிடுவதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு, கேட்டுக்கொள்கின்றேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இக் கடிதத்தின் நகல்கள், பதுளை மாவட்ட அரச அதிபர், பதுளை மாவட்ட மதுவரி மற்றும் கலால் திணைக்கள பிரதி ஆணையாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
11 Jul 2025
11 Jul 2025