Editorial / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
மதுபோதையில் பஸ்ஸை ஓட்டிச் சென்ற சாரதியால் பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளானச் சம்பவமொன்று, பலாங்கொடை வெலிகபொல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பஸ் வண்டியை விரட்டிச் சென்ற போக்குவரத்தப் பொலிஸார், சாரதியைக் கைதுசெய்ததுடன், பயணிகளை மற்றுமொரு பஸ்ஸில் ஏற்றி அனுப்பியுள்ளனர்.
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பலாங்கொடை டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸில் பணியாற்றும் சாரதியே, இவ்வாறு கைதுசெய்யப்பாட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago