Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 11 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
டுபாயில் ஹோட்டல் ஒன்றுக்குள் வைத்து கைதுசெய்யப்பட்ட மாகந்துரே மதுஷ் என்றழைக்கப்படும் பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் உள்ளிட்ட 25பேரின் கைதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், பதற்றத்துடன் உள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அக்குறணை தபாலகக் கேட்போர் கட்டத்தில், நேற்று முன்தினம்(09) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறுத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், போதைப் பொருள் வியாபாரம் என்பது, பாரிய பின்னணிக் கொண்டதென்றும் கடந்த காலங்களில் நூற்றுக்கணக்கான கிலோ கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டபோதிலும், அதன் உரிமையாளர்கள் அரசியல் பின்னணி கொண்டவர்கள் என்பதால் கைதுசெய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
மாகந்துர மதுஷ் தொடர்பிலேயே தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருவதாகவும் அவரது கைதால், எம்.பிக்கள் சிலர் குழப்பமடைந்துள்ளதை அவதானிக்க முடிவதாகவும் தெரிவித்த அவர், இதற்கு காரணம் என்னவென்பது அனைவருக்குமே தெரிந்த விடயமென்றும் தெரிவித்தார்.
மதுஷ், இலங்கைக்கு அழைத்துவரப்பட்டால், அவர் விடுதலைச் செய்யப்படுவார் என்பதால், அவருக்கு டுபாயிலேயே தண்டனை வழங்கப்பட வேண்டுமென, சமூக வலைத்தளங்களில் பரவலாகக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago