Gavitha / 2020 நவம்பர் 25 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இக்பால் அலி
நாடளாவிய ரீதியில், தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களுக்கான மூன்றாம் தவணை கல்வியாண்டுக்காக பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய மாகாணத்தில் மாத்திரம், 15 பாடசாலைகள் திறக்கப்படவில்லை என, மத்திய மாகாண கல்வி வலயப் பணிப்பாளர் திலக் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
கண்டி வலயத்தில் இரண்டு பாடசாலைகளும் கட்டுகஸ்தோட்டை கல்வி வலயத்தில் 07 பாடசாலைகளும் ஹட்டன் கல்வி வலயத்தில் 05 பாடசாலையும் மாத்தளை கல்வி வலயத்தில் 01 பாடசாலையும் திறக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பகுதிகளில் உள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகளே திறக்கப்படவில்லை என்றும் சுகாதார பிரிவினர் ஆலோசனையின் படி, எதிர்வரும் தினங்கள் இந்தப் பாடசாலைகளையும் திறப்பதற்கான தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், மாகாண மட்டத்தில் அனைத்துப் பாடசாலைகளிலும் 60 சதவீதமான மாணவர்கள் சமூகமளித்துள்ளனர் என்றும் 80 சதவீதமான ஆசிரியர்கள் சமூகமளித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, மத்திய மாகாணத்தில், கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை, 264ஆக பதிவாகியுள்ளது என, மத்திய மாகாண சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் பிரகாரம், கண்டி மாவட்டத்தில் அதிக தொற்றாளர்களாக 144 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் நுவரெலியா மாவட்டத்தில் 83 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 37 பேரும் பதிவாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026