2026 மே 09, சனிக்கிழமை

dd

மத்ரசா கல்லூரிக்கு நிதி சேகரித்த ஐவர் கைது

எம். செல்வராஜா   / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலையில் மத்ரசா கல்லூரியொன்றை நிர்மாணிப்பதற்காக, பதுளை மாவட்டத்துக்குட்பட்ட போகஹாகும்பர பகுதியில் நிதி சேகரிப்பில் ஈடுபட்ட ஐந்து ​இளைஞர்களை, நேற்று (12) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே, நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இவர்கள் பயணித்த வானொன்றையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியாவைச் சேர்ந்த மூவரும் ஹொரவப் பொத்தானையைச் சேர்ந்த ஒருவரும் மரதன்கடவெலயைச் சேர்ந்த ஒருவருமே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .