2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மீன் வலையில் சிக்கிய T-56

Janu   / 2025 ஜூலை 01 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹியங்கனை , மாபாகட வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த  மீனவரின் வலையில் T-56 துப்பாக்கியொன்று செவ்வாய்க்கிழமை (01) சிக்கியுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர்.   

பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்தவின் அறிவுறுத்தலின் பேரில், மஹியங்கனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சந்தன வீரசிறியின் வழிகாட்டுதலின் கீழ் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாலித்த ஆரியவங்ச


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .