2026 மே 06, புதன்கிழமை

மின்னியல் கிரைண்டர் கழுத்தில் பட்டு ஒருவர் பலி

Janu   / 2026 மே 06 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடுகஸ்தொட்ட, மாவில்மட பிரதேசத்தில் மின்னியல் கிரைண்டர் (Grinder) மூலம் இரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த 66 வயதுடைய நபர் ஒருவர், குறித்த கிரைண்டர் கழுத்தில் பட்டு படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாமர கெதர பியசிறி என்ற 66 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனது வீட்டுக்கு முன்னால் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். இதன்போது, வேலிக்குத் தேவையான இரும்புகளை மின்னியல் கிரைண்டர் மூலம் வெட்டிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அது அவரது கழுத்தில் பட்டுள்ளது.

இதனால் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .