Freelancer / 2023 மார்ச் 07 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்களுடைய மகனுக்கு சைக்கிள் வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பும் வழியில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, மனைவியின் நெஞ்சிலேயே அவரது கணவன் கத்தியால் குத்தியுள்ளார்.
மொனராகலையில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மனைவி, கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தங்களுடைய பிள்ளைக்கு சைக்கிள் வாங்குவதற்காக இவ்விருவரும் கடந்த 25ஆம் திகதியன்று மொனராகலை நகரத்துக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த போதே, கணவனால் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.
சம்பவத்தை கேள்வியுற்ற பிரதேசவாசிகள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு அவர் மார்ச் 3ஆம் திகதியன்று மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பொலிஸார் தேடிவருகின்றனர்.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago