R.Tharaniya / 2025 டிசெம்பர் 11 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனைவியை பலவந்தப்படுத்த முயன்றதாகக் கூறப்படும் 37 வயதான நபரொரவர் தாக்கியதில் அந்த பெண்ணின் கணவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இரத்தினபுரி பேரண்டுவ தோட்டத்திலேயே இடம்பெற்றுள்ளது என இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் ஏற்பட்டதற்கு முதல் நாள் இரவு, இருவரும் ஒரு பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
அங்கு, குறித்து இருவருக்கும் இடையில் மனைவியை பலவந்தம் செய்ய முயன்றமை தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது.
இந்நிலையில், சந்தேக நபர் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதம் மற்றும் மரக்கட்டைகளால் தாக்கியதால் பெண்ணின் கணவரான பெத்த மணி என்றழைக்கப்படும் வேலு யோகேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார். இவரும் தோட்டத் தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது.
காயமடைந்திருந்த சந்தேகநபர், இரத்தினபுரி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பொலிஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகின்றார் என தெரிவித்த இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
25 minute ago
38 minute ago
47 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
38 minute ago
47 minute ago
54 minute ago