Janu / 2024 ஏப்ரல் 17 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
திம்புல-பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டக்கலை ஹரிங்டன் தோட்ட மக்கள் , பரம்பரை பரம்பரையாக பராமரித்து வந்திருந்த பொது மயானத்தில் அமைப்பட்டிருந்த கல்லறைகள் உடைக்கப்பட்டு அங்கு "பெகோ" இயந்திரங்கள் ஊடாக பொது மயான அடையாளத்தை அழித்து வருவதாக கூறி இடுகாட்டில் குவிந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றில் புதன்கிழமை (17) ஈடுபட்டுள்ளனர் .
அதேநேரத்தில் இத்தோட்டத்திற்கென உழைத்து உயிர் விட்ட மக்களின் புதை குழி இடம் அழிக்கப்படுவதற்கு இடம் கொடுக்க முடியாது என்றும் இத் தோட்டத்தில் எஞ்சி வாழ்பவர்களும் இறந்து போனால் இவ்விடத்தில் தான் புதைக்க வேண்டும் ஆகையால் பொது மயானத்திற்கு உரிய மூன்று ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்க வேண்டாம் எனவும் இத் தோட்டத்தின் ஏனைய நிலங்களை பிரித்து விற்பணை செய்வதற்கு தாம் எதிர்ப்பு காட்டவில்லை அதேநேரத்தில் எமக்கான மயான பூமி இடத்தை விட்டுக் கொடுக்க தாம் தயாரில்லை என மக்கள் உறுதியாக தெரிவிக்கின்றனர்.
எனவே இந்த விடயம் தொடர்பில் தோட்ட உரிமையாளர், அமைச்சர்கள், அரசியல்வாதிகள் என பலரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ள மக்கள் பொது மயானத்தில் அமர்ந்து தமக்கு உரிய தீர்வு கிட்டும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என என தெரிவித்தனர்.
மேலும் குறித்த ஆக்கிரமிப்பு தொடர்பில் அத் தோட்ட மக்கள் திம்புள-பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் .
ஆ.ரமேஸ்


6 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago