2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

மரக்குற்றிகளுடன் மூவர் கைது

Editorial   / 2018 ஜூன் 15 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித ராஜபக்ஷ

லொறியொன்றில் சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட மரக்குற்றிகளுடன், மூவரை, ஹட்டன் பொலிஸார், இன்று (14) கைதுசெய்தனர்.

பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலைத் தொடர்ந்து, ஹட்டன் - ருவன்புர வீதி வழியாகப் பயணித்த லொறியை வழிமறித்துச் சோதனை செய்த பொலிஸார், மரக்குற்றிகளை கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகநபர்கள் மூவரைக் கைதுசெய்துள்ளனர்.

ருவன்புர வீடமைப்புத் திட்டத்தின் நீரேந்துப் பகுதியில் 8 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டிருந்த யூக்கலிப்டஸ் மரங்களே இவ்வாறு சட்டவிரோதமாக வெட்டப்பட்டு, லொறியில் கொண்டு செல்லப்பட்டுள்ளனவென, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ருவன்புர, மட்டுகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X