2025 மே 12, திங்கட்கிழமை

மரண பீதியில் மக்கள்

Ilango Bharathy   / 2021 ஜூன் 23 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

ஹட்டன்- சிங்கமலை வனத்தில் உள்ள சிறுத்தைகள், ஹட்டன்- காமினிபுர பகுதிகளிலுள்ள
வீடுகளுக்கு அருகில் இரவில் வந்துச் செல்கின்றமை, வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
கெமெராக்களில் பதிவாகியுள்ளன.

காமினிபுர பகுதியானது சிங்கராஜ வனத்துக்கு அருகில் இருப்பதால், வீடுகளில் வளர்க்கப்படும்
நாய்கள் மற்றும் கால்நடைகளை வேட்டையாடுவதற்கு இவ்வாறு சிறுத்தைகள் வீட்டுக்கு
வருவதாகவும், இவ்வாறு வரும் சிறுத்தைகள் வீட்டு வாசல்களுக்கே வந்துச் செல்கின்றமையும்
சி.சி.டி.வி கமெராக்களில் பதிவாகியுள்ளன.


கடந்த சில நாள்களாக காமினிபுர பிரதேசத்தில் உள்ள நாய்கள் பல காணாமல் போயுள்ளதாகவும், எனவே இவ்வாறு குடியிருப்புகளுக்கு அருகில் வரும் சிறுத்தைகளைப் பிடித்து, வனங்களில் விட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் காமினிபுர பிரதேசவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X