2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மரண வீட்டுக்கு சென்றோர் விபத்தில் சிக்கினர்; 11 பேர் காயம்

Editorial   / 2017 நவம்பர் 08 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், மு.இராமச்சந்தின் 

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் லொறியொன்று விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமுற்ற நிலையில், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென,  தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன், வெளிஓயாவிலிருந்து எல்ஜின் பகுதிக்கு மரண வீடொன்றுக்குச்  சென்றவர்கள் பயணித்த லொறியே, நேற்றிரவு (07) 11 மணியளவில் இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.

தலாவக்லை தேயிலை தொழிற்சாலைப் பகுதியை நெருங்கியதும்,  லொறியில் திடீரென தடை (பிரேக்) இயங்காத நிலையிலே பாதையோரமிருந்த மண்மேட்டில் லொறி மோதுண்டுள்ளது.

இதில் லொறியின் சாரதி உட்பட 11 பேர் காயமுற்று, லிந்துலை வைத்தியசாலையில் அனுமதித்தப்பட்ட போதிலும் மேலதிக சிகிச்சைக்காக இருவர், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனரென, தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .