Ilango Bharathy / 2021 டிசெம்பர் 15 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
பெருந்தோட்டங்களில் இடம்பெறும் திடீர் மரணங்கள் மற்றும் கொரோனா
தொற்றால் உயிரிழப்பவர்களுக்கு குறித்த தோட்டங்களில் பணிபுரியும்
தோட்ட மருத்துவ உதவியாளர்கள் மரணச் சான்றிதழை வழங்குகின்றமை
தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு, பதிவு செய்யப்பட்ட
வைத்தியர்கள் அரச வைத்தியர்கள் மற்றும் திடீர் மரண விசாரணை
அதிகாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் டிக்கோயா வைத்தியசாலையின் விசேட நீதிமன்ற
வைத்தியருக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளதாக திடீர் மரண விசாரணை
அதிகாரிகளின் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் பசீர் மொஹமட்
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பசீர் மொஹமட், நேற்று (14) விசேட அறிவிப்பொன்றை
வெளியிட்டுள்ளதுடன், பெருந்தோட்ட வைத்தியசாலைகளில் பணிபுரியும்
வைத்தியர்கள் பதிவு செய்யப்பட்ட அரச வைத்தியர்களாக இருக்க வேண்டும்.
ஆனால், பெருந்தோட்டங்களில் வைத்தியர்களாக கடமையாற்றுபவர்கள்
மருந்தகங்களில் பல காலங்களாக பணிபுரிந்தவர்கள் என்றும் அவர்
தெரிவித்துள்ளார்.
எனவே, பெருந்தோட்டங்களில் எவராவது திடீரென உயிரிழந்தால் அல்லது
தொற்று ஏற்பட்டு உயிரிழந்தால், அது தொடர்பான மரண சான்றிதழை
விநியோகிக்கும் அதிகாரம் அருகிலுள்ள மாவட்ட வைத்தியசாலைகளின்
வைத்தியர்களுக்கு மாத்திரமே உண்டென தெரிவித்துள்ளார்.
எனினும், சில பெருந்தோட்டங்களில் கொரோனா மற்றும் திடீரென
உயிரிழந்த சிலருக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமல் மரண
சான்றிதழ்களை விநியோகித்துள்ளமை சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விநியோகிக்கப்பட்ட மரண சான்றிதழை அடிப்படையாக கொண்டு,
பெருந்தோட்டங்களில் கொரோனாவால் உயிரிழந்த பலரது சடலங்கள் தகனம்
செய்யப்படாமல் புதைக்கப்பட்டுள்ளதாகவும் பசீர் மொஹமட்
தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .