2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மரத்தில் மோதியதால் விபத்து ; ஒருவர் காயம்

Janu   / 2023 ஜூன் 08 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.திவாகரன்,டி.சந்ரு 

நுவரெலியாவிலிருந்து - நானுஓயா டெஸ்போட் வழியாக கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்று நுவரெலியா - தலவாக்கலை ஏ7  பிரதான வீதியில் நானுஓயா கிரிமிட்டிய பகுதியில் விபத்துக்குள்ளானது.

கொழும்பிலிருந்து நுவரெலியா  சென்றுவிட்டு மீண்டும் கொழும்பு நோக்கி  செல்லும் வழியிலேயே குறித்த வேன் பாதையை விட்டு விலகி வீதியோரத்தில் இருந்த மரம் ஒன்றில் மோதி நேற்றிரவு புதன்கிழமை 11 மணியளவில்  விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து இடம்பெற்ற போது குறித்த வேனில் 8 பேர் பயணித்துள்ள போதிலும் ஒருவருக்கு மாத்திரம்  காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் ஆரம்ப சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோர் வேறொரு வேன் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்

வேன் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து நேர்ந்ததாக ஆரம்பக்கட்ட  விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. விபத்து தொடர்பில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X