2025 ஜூலை 16, புதன்கிழமை

மரம் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு

Sudharshini   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

மஸ்கெலியா பிரதான வீதி, லொனெக் தோட்டத்துக்கு அருகில், பாரிய மரமொன்று முறிந்து மின்சார கம்பிகள் மீது விழுந்ததால், இப்பகுதிக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று (14) அதிகாலை 4 மணிக்கு இடம்பெற்ற இச்சம்பவத்தினால்,  மின்சார கம்பங்கள் முற்றாக பாதித்ததுடன் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.


இதேவேளை, பிரதான வீதியில் இம்மரம் முறிந்து விழுந்ததில் இவ்வீதியின் போக்குவரத்து பல மணி நேரம் ஸ்தம்பிதமடைந்திருந்தது.

இதனையடுத்து இலங்கை மின்சார சபையினர் அவ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டதுடன்  பின்னர் மரம் வெட்டி அகற்றப்பட்டுள்ளது.

எனினும், மின்சார இணைப்பை சீர்செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X