2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

மரம் முறிந்ததில் மின்சாரம் துண்டிப்பு

Gavitha   / 2017 ஏப்ரல் 02 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மு.இராமச்சந்திரன்,  எஸ்.கணேசன், இலங்கா காமினி

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காசல்ரீ சமர்வில் பகுதியில், இன்றுக்காலை  8:30 மணியளவில் கருப்பன் தேயிலை மரமொன்று முறிந்து விழுந்ததில், நோட்டன் -  ஹட்டன் பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டதுடன். அப்பகுதிக்கான மின்சாரமும் தடைப்பட்டது. 

மரம் முறிந்து விழுந்தமையால், அருகிலிருந்த  குடியிருப்புகளுக்கோ அல்லது ஆலயத்துக்கோ எவ்விதமான பாதிப்புகளும்  ஏற்படவில்லை என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

விரைந்து செயற்பட்ட பொதுமக்களும் பொலிஸாரும் மரத்தை வெட்டி அப்புறப்படுத்திய பின்னர்,  11 மணியளவில்,  போக்குவரத்து வழமைக்கு திரும்பியது. எனினும், இன்று மாலை வரையிலும் மின்சாரம் சீரமைக்கப்படவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .