2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

மரம் விழுந்து வீடு சேதம்

Mayu   / 2024 ஜனவரி 11 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்ற நிலையில் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

இதற்கமைய, மலையக பிரதேசங்களில் கடுமையான மழை மற்றும் பலத்த காற்றும் வீசி வருகின்ற நிலையில் நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்ப்பட்ட நானுஓயா டெஸ்போட் (சீனிக்கத்தாளை) பகுதியில் இரண்டு வீடுகள் மீது மரமொன்று விழுந்தமையால் வீடுகள் சேதமடைந்துள்ளது.

குறித்த வீடுகளில் யாரும் இல்லாததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (09) இரவு இடம்பெற்றுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட வீடுகளை அப்பகுதிக்கு பொறுப்பான 476/A கிராமசேவகர் பார்வையிட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் நுவரெலியா பிரதேச சபையில் கவனத்திற்கும், நுவரெலியா மாவட்ட இடர்முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செ.திவாகரன்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X