2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மருந்தகங்கள் முடங்கின; நோயாளர்கள் அவதி

Editorial   / 2017 நவம்பர் 01 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிந்திர விராஜ் அபயசிறி

அரச மருந்தாளர்கள், நாடளாவிய ரீதியில் இன்று  மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு காரணமாக, வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ கற்கைகள் தொடர்பான கற்கைநெறி ஒன்று இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அரச மருந்தாளர்கள், இன்றுக் காலை 8 மணிமுதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இப்பணிப்புறக்கணிப்பு காரணமாக வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு, மருந்து மற்றும் மருந்துச் சீட்டுகளை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் இதனால், சிகிச்சைக்காக வந்த நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனரெனவும் வைத்தியசாலைகளின் நிர்வாகங்கள் தெரிவித்தன.

குறிப்பாக, மாத்தளை மாவட்டத்தில் மருந்தக பிரிவுகள் இன்று  மூடப்பட்டிருந்ததாகவும் இப்பிரிவை திறப்பதற்கு முயற்சித்த போதிலும், அதற்கு பொறுப்பான மருந்தாளர்கள், மருந்தகப் பிரிவை பூட்டிவிட்டு சாவியைக் கொண்டுச் சென்றுவிட்டனரென்றும் மாத்தளை மாவட்ட வைத்திய அதிகாரி அருண விக்ரம தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .