2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

மருந்துக்கு பணம் இல்லாததால் உயிரை மாய்த்த முதியவர்

Janu   / 2025 செப்டெம்பர் 02 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை, பசறை, பெகஹஹதென்ன, பிரதேசத்தில் நபர் ஒருவர்  தனது நோய்க்கு மருந்து வாங்க பணம் இல்லை என  கூறி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

பசறை, பெல்கஹதென்ன, கிரிகல கிராமத்தைச் சேர்ந்த ஹென்நாயக்க முதியன்சேலாகே சுது பண்டா என்பவரே இவ்வாறு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக 1 ஆம் தேதி பிற்பகல் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் மரண விசாரணை அதிகாரி டி.எம். விக்ரமநாயக்கவின் உத்தரவுக்கமைய பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் நீண்ட காலமாக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் எழுதியதாக சந்தேகிக்கப்படும் கடிதமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.   .

பாலித்த ஆரியவங்ச

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .